சினிமா செய்திகள்
காங்கிரஸில் இருந்து வெளியேறுகிறாரா குஷ்பு?

நடிகை குஷ்பு மீண்டும் சினிமாவில் தனக்கு விருப்பம் இருப்பதாகவும், மீண்டும் சினிமாவுக்கு வர தயாராக இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல், பிரபு என பல முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகை குஷ்பு.
இயக்குநர் சுந்தர். சியை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். சுந்தர். சி இயக்கும் படங்களில் அவ்வப்போது தலை காட்டி வந்த குஷ்பு, சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வந்தார்.
பின்னர், அரசியலில் உள்ள ஈடுபாட்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வரும் குஷ்பு, சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்ததால், அரசியல் விவாதங்களில் பெரிதாக பங்கேற்கவில்லை. இந்நிலையில், மீண்டும் தான் சினிமாவுக்கு வர விரும்புவதாகவும், ரசிகர்களின் கருத்து என்ன வென்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு பெரும்பான்மையான ரசிகர்கள், மீண்டும் சினிமாவுக்கு வாருங்கள், நல்ல ரோல் எடுத்து நடிங்க எனக் கூறியுள்ளனர். சிலர் காங்கிரசில் இருந்து வெளியேறுகிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.





















