சினிமா செய்திகள்
சாஹோ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான சாஹோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் சாஹோ படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீசாக வெளிவருகிறது.
300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துள்ளார். மேலும், நீல்நிதின் முகேஷ், அருண் விஜய், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் வரும் ஜூன் 13ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.













