இந்தியா
ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!
இந்திய ரயில்வே, “Rail Parcel App – Ghar Se Ghar Tak” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
* மொபைல் செயலி அல்லது இணையதளத்தில் பார்சல் பதிவு செய்யலாம்.
* தனியார் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் உங்கள் வீட்டிற்கே வந்து பார்சலைப் பெற்றுக்கொள்ளும்.
* இந்திய ரயில்வே அந்தப் பார்சலை ரயில் மூலம் destination நகரத்திற்குக் கொண்டு செல்லும்.
* அங்கிருந்து மற்றொரு விநியோகப் பங்குதாரர் பெறுநரின் வீட்டு முகவரியில் சேர்ப்பார்.
* பார்சலின் பயண நிலையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்.
முதற்கட்டமாக 8 நகரங்கள்: டெல்லி மும்பை கொல்கத்தா சென்னை அகமதாபாத் ஹைதராபாத் பெங்களூரு புனே ,இத்திட்டத்தின் கீழ் பார்சல்களை அனுப்ப உள்ளன.
தனி நபர்கள் மற்றம் சிறுவணிகர்களுக்க பயன்படக் கூடிய இந்தச் சேவை இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் தொடங்கப்படவில்லை. செயலி சோதனை முடிந்த பிறகு தொடங்கும் தேதியை ரயில்வே அறிவிக்கும். எனவே மதுரை உள்ளிட்ட பிற நகரங்களில் உடனடியாகக் கிடைக்கும் என்று கூற முடியாது.. . தொடக்கத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை
