Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.10.2026

Published

on

  1. கால்நடைகளை மட்டுமே தாக்கும் என நம்பப்பட்ட ஷமோண்டோ வைரஸ் பிரான்ஸ் நாட்டில் முதன்முறையாக மனிதருக்கு பரவியது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
  2. சாலை விபத்துக்களை குறைப்பதற்காக 2030 அக்டோபர் முதல் புதிய கார்களில் தானியங்கி அவசரகால பிரேக்கிங் (AEB) வசதியைக் கட்டாயமாக்க ஒன்றிய அரசு வரைவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  3. பள்ளிகளில் சுற்றுச்சுவர் இடிந்தால்… மொட்டை மாடியில் தண்ணீர் தேங்கினால்… தலைமை ஆசிரியரே பொறுப்பு- பள்ளி கட்டிடங்களை 100% ஆய்வு செய்ய உத்தரவு
  4. கோவை மாணவர் தற்கொலை விவகாரம் தொடர்பாக மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம்.
  5. லைஃப் ஜாக்கெட் இல்லை. GPS இல்லை. திசைகாட்டியும் இல்லை. நான்கு குழந்தைகளுக்குத் தாயான ரேகா, அரபிக்கடலின் ஆழமான பகுதிக்குள் சென்றார். முதலில், அவருக்கு உரிமம் வழங்க மறுக்கப்பட்டது. ஆனால், பின்னர் இந்தியாவின் முதல் உரிமம் பெற்ற ஆழ்கடல் மீன்பிடிப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
  6. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க ஒன்றிய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
  7. நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உள்ள ஒரு கோளில் தண்ணீரைக் கண்டறிந்த விஞ்ஞானி, தனது சொந்த வீட்டின் முன்புறத் தாழ்வாரத்திலேயே து*பாக்கியால் சு*டுக் கொ*லப்பட்டார். 67 வயதான கார்ல் கிரில்மேயர், கால்டெக் (Caltech) நிறுவனத்தைச் சேர்ந்த வானியற்பியலாளர். தொலைதூரக் கோளில் தண்ணீர் இருப்பதை வெளிப்படுத்திய அவரது ஆய்வுக் கட்டுரை, அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக அமைந்தது.
  8. நாங்கள் நீதிமன்றத்தின் நடைமுறைகளை மதிக்கிறோம். தற்போது எதுவும் சொல்ல முடியாது. எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை அனைவரையும், கலந்தாலோசித்து அறிவிப்போம். ஞானேஸ் குமாரின் ராஜினாமாவை எதிர்பார்க்கிறோம்” சவுரவ் தாஸ் CJP.
  9. விமான எரிபொருளுக்கான மதிப்புக்கூட்டு வரியை 29 சதவீதத்திலிருந்து  16 சதவீதமாக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு. விமானங்களின் இயக்கச் செலவில் எரிபொருளுக்கான செலவே பாதியளவு இருக்கம் என்பதால் வரிக்குறைப்பு மூலம் விமான கட்டணங்கள் குறைய வாய்ப்பு. இந்த உத்தரவு அக்டோபர் 31 முதல் அமலுக்கு வரும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா7 நாட்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா6 நாட்கள் ago

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 24.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.10.2026

Translate »
Exportador de bolsas de algodón de calidad suprema.