இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

- அரசு மற்றும் தனியார் மருத்தவமனைகள் அனைத்திலும் கட்டண விவரங்கள் அணைத்தும் முழுமையாக காட்சிப்டுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தல்.
- UPI வணிக பரிவர்த்தனைக்கான 0.4% கட்டண விதிக்கும் நடைமுறை தீபாவளிக்கு பிறகே நடைமுறைக்கு வரும் என ஒத்திவைப்பு
- ஜெயிலர் 2’ படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடத் தடை
- திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை யாக்ஷினி தங்கம் வென்று அசத்தல்! ரஷ்யாவின் துலா பிராந்தியத்தில் நடைபெற்ற 20-வது ஆசியப் பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்தது.
- சிறப்பு ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சிறப்பு ‘டெட்’ தேர்வின் முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை (அக்.12) இரவு வெளியிட்டது.
- சிங்கப்பூரில் காற்று சுத்திகரிப்பான் விற்பனை 600% அதிகரிப்பு!
- மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பதவியையும், மாநிலங்களவை MP பதவியையும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தார்.


