இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் சிஜேபி இன்று போராட்டம்! இணைய சேவை துண்டிப்பு, 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்.
- அபிஜித்தை விமானத்தில் கைது செய்தாலும், வாகனங்கள் தடுக்கப்பட்டாலும் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி சாரை சாரையாக வரும் விவசாய பெருமக்கள்.இந்தியாவிற்கு இது மிகப்பெரிய நாளாக” (Huge Day) அமைந்துவிட்டது என்று CJP- தெரிவித்துள்ளது.
- ரஷ்ய எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு வரி மிரட்டல்; அதே ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்க அமெரிக்கா ஒப்பந்தமா? ட்ரம்பின் இரட்டை நிலைப்பாடு குறித்த சர்ச்சை!
- “நான் இப்போது டெல்லியில் இருக்கிறேன் டெல்லியில் போர் பதற்றச் சூழல் நிலவுகிறது நம்நாட்டு மாணவர்கள் – இளைஞர்கள் மீது யுத்தத்தை தொடுக்க பல்லாயிரக்கணக்கான துணை ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளது” களத்தில் சந்திக்க இருக்கிறோம் போராடுவது அடிப்படை உரிமை என்று உரக்கச் சொல்வோம்- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்
- Supreme court cjp protest: என்ன நடக்குது இந்த நாட்டுல போராடக் கூடாதா!..அதிர்ந்து போன உச்சநீதிமன்றம் இறங்கிய TOP LAWYERS..
- “எங்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே மோடி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார்.”- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே
- தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க மும்பையில் இருந்து டெல்லி வந்த CJP நிறுவனர் அபிஜித் தீப்கே விமானத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்!
- டெல்லியில் முன்னாள் முதலமைச்சர்கள் பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் கைது போராட்டத்தில் பங்கேற்க சென்ற மார்க்சிஸ்ட் கம்யனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, பெ.சண்முகம், பாலபாரதி, வாசுகி, சிபிஐ மத்திய குழுஉறுப்பினர் கருமலையான் ஆகியோரும் கைது.
- மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் ஆளும் தவெக வெற்றி! சட்டப்பேரவையில் தவெக-வின் பலம் 109-ஆக உயர்வு!
- தேர்தல் கமிஷன் அதிகாரி ஞானேஷ் குமார் ஓட்டு திருட்டை எதிர்த்து,அவரை பதவி விலக கோரி CJP போராட்டம் செய்வதை தடுப்பதற்காக, இளைஞர்கள் ஜந்தர் மந்திர் செல்வதை தடுப்பதற்காக, டெல்லியின் சாலைகளை குப்பைகளை கொட்டும் பாஜக அரசு.
- டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை பெசண்ட்நகரில் குரலெழுப்பிய சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் கைது!-அறவழி போராட்டங்களை ஒடுக்கும் ஜனநாயக அத்துமீறல் ஏற்புடையதல்ல! – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
- இந்தியா முழுவதும் 100% நெட்வொர்க் கவரேஜ் வழங்கும் நோக்கில், 1,600 செயற்கைக்கோள்கள் மற்றும் 23 தரை நிலையங்களுடன் புதிய தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் தொலைத்தொடர்புத் துறையில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம்.


