இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

- தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கனத்த இதயத்துடன் தன்னை விடுவித்துக் கொள்வதாக கூறி அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் கெளதமி அறிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும். – முதல்வர் விஜய் அறிவிப்பு.
- சட்டமன்ற உறுப்பினர்களுக்கான 2 நாள் புத்தாக்க பயிற்சி முகாமை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்
- அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். விஜய் பிறந்த நாளில் தவெகவில் இணைகிறார்.
- இருமல் மருந்து உட்பட “சிரப்“ வகை மருந்துகளை மருந்து கடைகளில் பெற இனி மருத்துவரின் பரிந்துரை சீட்டு கட்டாயம். – மத்திய அரசு.
- நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்கவும் குற்றவாளிகள் தடயத்தை அழிக்காமல் இருக்கவும் ஜீன் 22 வரை டெலிகிராம் சமூக வலைதளத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவெ வெளியிட்ட டெலிகிராம் பதிவுகளை எடிட் செய்ய ஜீன் 30 வரை தடை விதித்தது மத்திய அரசு.
- தவெக அரசுக்கு எதிராக தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜீன் 22 ம் தேதி சென்னை மாநில கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது.
- தமிழக அரசின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் மரியா வில்சன் வெளியிட்டுள்ளார்
- தஞ்சாவுர் விமானப்படை தளத்தில் பயணிகள் முணையம் அமைப்பதற்கான வடிவமைப்பு ஒப்புதலை வழங்கியது மத்திய அரசு. சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் ரூ.100 கோடி செலவில் பயணிகள் முனையத“தை அமைக்க திட்டம்.
- 2030க்குள் ஏஐ டேட்டா சென்டர்களுக்குத் தேவையான ஓராண்டுத் தண்ணீர் தேவை 9.3 லட்சம் கோடி லிட்டராக அதிகரிக்கும். இது 130 கோடி மக்களின் ஓராண்டு நீர் தேவையைப் புர்த்தி செய்வதற்குச் சம்ம். அதேபோல் மின் பயன்பாடு 945 டெராவாட் அவர்ஸ் ஆக உயரும் எனவும் ஐநா எச்சரிக்கை.


















