ஆன்மீகம்
லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!
Published
17 மணி நேரங்கள் agoon
By
Poovizhi
ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், சுக்கிரன் மற்றும் புதன் ஒரே ராசியில் சேரும் போது உருவாகும் ‘லட்சுமி நாராயண யோகம்’ மிக மங்களகரமானதாக கருதப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு மே 14 அன்று சுக்கிரன் மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதனைத் தொடர்ந்து மே 29 அன்று புதன் அதே ராசியில் இணைகிறார். இந்த இரு கிரகங்களின் இணைவு மூலம் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசிக்காரர்களுக்கு செல்வம், வெற்றி, ஆடம்பரம் மற்றும் புதிய வாய்ப்புகளை வழங்க இருக்கிறது.
♊ மிதுனம்
இந்த யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய ஆற்றலையும், முன்னேற்றத்தையும் தரும். நீண்டநாளாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். வீடு கட்டுதல், திருமணம் போன்ற விஷயங்களில் இருந்த தடைகள் அகலும். வேலைப்புரிபவர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு உள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரித்து நிதிநிலை மேம்படும்.
♍ கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமைகிறது. கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டு மற்றும் அங்கீகாரம் அதிகரிக்கும். வெளிநாடு வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த காலம். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
♎ துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பாக்கிய ஸ்தானத்தில் அமைகிறது. மனஅழுத்தம் குறைந்து தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலுவையில் இருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் பிற முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். ஆன்மீக பயண வாய்ப்புகளும் உருவாகும்.
♐ தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் உறவுகள் மற்றும் கூட்டுத் தொழில்களை குறிக்கும் ஏழாம் வீட்டில் அமைகிறது. திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கி நல்ல வரன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதிநிலை மேம்பட்டு சொத்து, நகை, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

கல்யாண வீட்டு ஸ்டைல் வாழைக்காய் வறுவல் – வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் எளிதாக செய்வது எப்படி?

Lakshmi Narayana Yogam 2026: கும்ப ராசியில் புதன்–சுக்கிரன் இணைவு – 3 ராசிகளுக்கு பெரும் நிதி யோகம்!

முதல் வேலை அமேசானில்.. 9 மாதத்தில் வேலைநீக்கம்.. இந்திய இளைஞரின் சோகமான பதிவு..!

இந்த ரயில் பாதைக்காக இந்தியன் ரயில்வே ரூ.1 கோடி பணம் கொடுக்கின்றதா?

உலக வங்கியின் தலைவர் ஆகிறார் இந்தியர்.. அமெரிக்காவை ஆளப்போகும் இந்தியர்கள்..!


















