சினிமா செய்திகள்
இந்திய அளவில் காண்ட்ராக்டர் நேசமணி டிரெண்டாக காரணம் தெரியுமா?

விஜய், சூர்யா நடிப்பில் வெளியான பிரெண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேல் கதாபாத்திரத்தின் பெயர் காண்ட்ராக்டர் நேசமணி. அந்த படத்தில் இடம்பெற்ற சுத்தியல் காமெடி மிகவும் பிரபலமான ஒன்று. ஆனால், அது மீண்டும் ஒரே நாளில் இந்தியளவில் தற்போது டிரெண்டாகி உள்ளது. அதற்கான காரணம் என்ன தெரியுமா?

சிவில் இன்ஜினியரிங்க் லேனர்ஸ் என்ற பக்கத்தில் சுத்தியல் படத்தை போட்டு இதை உங்கள் ஊரில் என்னவென்று அழைப்பார்கள் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த விக்னேஷ் பிரபாகர் எனும் குறும்புக்கார நெட்டிசன் பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு சுத்தியலால் அடிபட்ட காட்சிகளை எடுத்து சொல்லி உள்ளார்.
இந்த விவாதம் வைரலாக #Pray_for_Nesamani என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்த நேசமணியை வைத்து பல மீம்ஸ்களும், அப்பல்லோவில் நேசமணி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் இட்லி சாப்பிடுகிறார் என்றும் நேசமணி இந்த நிலைமைக்கு காரணமாக இருப்பவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்யும் என பல அலப்பறைகள் பரவி வருகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக அன்புமணியை வைத்தும் நேசமணி ட்ரோல் ஓடுகின்றது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வடிவேல் டர்பன் அணிந்திருக்கும் படத்தை போட்டு, இதுபோன்ற டர்பனை நேசமணி போட்டு இருந்தால், அந்த விபத்தில் இருந்து தப்பித்து இருப்பார் என கமெண்டும் பதிவிட்டுள்ளார்.




















