செய்திகள்
Punjab and Sind Bank வேலைவாய்ப்பு 2026: 1000 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.75,000 வரை சம்பளம்!
Published
7 மாதங்கள் agoon
By
Poovizhi
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை Institute of Banking Personnel Selection (IBPS) மூலம் நிரப்புவது வழக்கம். State Bank of India (SBI) தவிர்த்து மற்ற 11 பொதுத்துறை வங்கிகளில் இந்த ஆட்சேர்ப்பு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட Punjab and Sind Bank தற்போது 1,000 காலிப்பணியிடங்களுக்கான “உள்ளூர் அதிகாரி” (Local Officer) பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சில பொதுத்துறை வங்கிகள், நிரந்தர பணியிடங்களை தாங்களே போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகின்றன. அதுபோலவே இந்த ஆட்சேர்ப்பும் நேரடியாக வங்கியால் நடத்தப்படுகிறது.
பணியிட விவரங்கள்:
மொத்தம் 1,000 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 65 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதி:
ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், வங்கி அல்லது நிதி துறையில் குறைந்தது 18 மாதங்கள் அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
பணியில் சேரும் தொடக்க நிலையில் மாதம் ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வங்கி துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

SBI வங்கியில் 7150 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம்!

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

Punjab & Sind Bank வேலைவாய்ப்பு 2026: 1000 பணியிடங்கள் – ரூ.85,000 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கவும்!

இந்தியன் வங்கியில் 171 சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்புகள் – அக்டோபர் 13 வரை விண்ணப்பிக்கலாம்!

எஸ்பிஐ வங்கியில் மேனேஜர், டெபுட்டி மேனேஜர் பணியிடங்கள் – 122 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு!




