Uncategorized
குடம்புளி மீன் குழம்பு – இத பத்தி உங்களுக்கு தெரியுமா?

மீன் குழம்பு தான் ஆனா பாக்குறதுக்கு வத்த குழம்பு மாதிரி இருக்கு இல்ல கொடம்புளி மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
பத்து சின்ன வெங்காயம் ,5 பல் பூண்டு, ஒரு ஸ்பூன் மிளகு ,ஒரு தக்காளி பழம், இரண்டு கொடம்புளி ஊறவெச்சு எடுத்துக்கோங்க.
சொல்லி இருக்க மசாலா பொருள் எல்லாமே சேர்த்து நைஸா அரைச்சு எடுத்துக்கோங்க.
கடையில எண்ணெய் ஊற்றி, வெந்தயம் ,கடுகு, ஐந்து இடித்த பூண்டு, சின்ன வெங்காயம் ,கறிவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும்.
பின் அரைத்து வைத்திருந்த மசாலா சேர்க்கவும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டு ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் அரை ஸ்பூன் தேவையான அளவு உப்பு ஒரு கப் தண்ணீர் சேர்த்து குழம்பை கொதிக்க விடவும் .
குழம்பு நன்றாக கொதித்து கெட்டியாக இருக்கும் போது மீனை அதில் போட்டு ஃபிளேம் வைத்து கொதிக்க விடவும் கடைசியில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு வெந்தயம், சீரகப்பொடி சிறிதளவு சேர்த்து தட்டு போட்டு மூடி வைக்கவும்.
உடம்புக்கு ஆரோக்கியம் தரும் கொடம்புளி மீன் குழம்பு தயார்

















