இந்தியா
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியவற்றின் சாராம்சம் வருமாறு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாடு மற்றும் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக அமையும்.
வாக்குச்சாவடிக்குள் செல்போன் அனுமதிக்கப்படமாட்டாது.
மிண்ணணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இடம்பெறும்.
தகுதியுள்ள வாக்காளர்கள் பெயர் சேர்க்க இப்போதும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
ECINET தளத்தில் வாக்குப்பதிவ நிலவரத்தை காணமுடியும்.
ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும்.
கடைசி 2 மிண்ணணு வாக்கு பதிவு எந்திரங்கள் எண்ணி முடிக்கும் முன்னரே தபால்வாக்கு எண்ணி முடிக்கப்படும்.
தமிழ்நாட்டில் 100 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை – 2530
20 முதல் 29 வயதுக்குள் 1.05 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
ஒரே கட்ட தேர்தல் நடத்த வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கை கருத்தில் கொள்ளப்பட்டது.












