இந்தியா
இன்றைய சட்டமன்ற இறுதிநாள் சுவாரஸ்யங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தலைமையிலான அரசு அமைந்து இன்று கடைசி நாள் சட்டமன்ற பேச்சினில் பேசிய பேச்சின் சுருக்கம் வருமாறு்..
எனக்குத் தரப்பட்ட பொறுப்பை மிகச் சிறப்பாக செய்ததாகவே நான் கருதுகிறேன்.இந்த மிகப் பெரிய வாய்ப்பை தந்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் கொளத்தூர் மக்களுக்கும் நன்றி தெரிவித்தக் கொள்கிறேன்.
அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித்தலைவர், அணைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி.
சாதனைகளுக்கத் தோள் கொடுத்த தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது. தங்களுடைய சுயமரியாதை எள்முனையளவு சீண்டப்பட்டால் அது யாராக இருந்தாலும் எதிர் குரல் கொடுக்கும் திசையில் முதல் ஆளாக நான் இருப்பேன். இருந்தாலும் தமிழர் பண்பாட்டை மனதில் கொண்டு அவருக்கு என் நன்றி.
இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ஆட்சியின் சிறப்புக்கும் என்னில் பாதியாக துணை நிற்கும் துணை முதலமைச்சர் உதயநிதிக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு அணைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர்களுக்கு எனது நன்றிகள்.
ஓபிஎஸ் ஆதரவு அதிமுக எம்எல்ஏ ஐயப்பன்
சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என எம்ஜிஆர் ஜெயலலிதா ஆசியோடும் அண்ணன் ஓபிஎஸ் வாழ்த்துக்களோடும் வாழ்த்துகிறேன்.


