இந்தியா
தமிழ்நாடு அரசின் 2026-27 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்

தமிழ்நாடு அரசின் 2026-27 ம் ஆண்டுக்கான இடைக்கால படஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.
துறை வாரியான நிதி ஒதுக்கீடு விவரங்கள் பின்வருமாறு
பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிக்கம் வகையில் ஊர்க்காவல்படை பணியில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்ப துறைக்கு ரூ.17068 கோடி ஒதுக்கீடு.
நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.21132 கோடி ஒதுக்கீடு
மாணவர்களுக்கான கட்டணமில்லா பஸ்பாஸ் திட்டத்திற்கு ரூ.1782 கோடி ஒதுக்கீடு
தூத்துக்குடியில் ரூ.5200 கோடி மதிப்பீட்டில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்.
ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28687 கோடி ஒதுக்கீடு
சிறப்ப திட்டங்களுக்காக ரூ.17088 கோடி ஒதுக்கீடு
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.218 கோடி ஒதுக்கீடு
மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.22080 கோடி ஒJக்கீடு
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின்கீழ் கூடுதலாக 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வித் துறைக்கு ரூ.8505 கோடி ஒதுக்கீடு
தூய்மைப் பணியாளர்களுக்கு 30000 வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வுருகிறது.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு ரூ.1471 கோடி நிதி ஒதுக்கீடு
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48534 கோடி ஒதுக்கீடு
மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறைக்கு ரூ.18091 கோடி ஒதுக்கீடு
போக்குவரத்துத் துறைக்கு ரூ.13062 கோடி ஒதுக்கீடு
சுற்றுலாத் துறைக்கு ரூ.17089 கோடி ஒதக்கீடு
ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.3934 கோடி ஒதுக்கீடு
காவல்துறைக்கு 4000 புதிய வாகனங்களும் தீயணைப்பத் துறைக்கு ரூ.400 கோடியில் புதிய வாகனங்களும் வாங்கப்பட்டுள்ளன.
நீர் வளத் துறைக்கு ரூ.10076 கோடி ஒதுக்கீடு
மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு ரூ.1722 கோடி ஒதுக்கீடு!
உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதியத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1100 கோடி ஒதுக்கீடு
விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கம் திட்டத்துக்கு ரூ.33000 கோடி ஒதுக்கீடு


