இந்தியா
நாளை தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கலாகிறது. – எகிறும் எதிர்பார்ப்புகள்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் 3 வது வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். புதிய அரசு பதவியேற்ற பின்னரே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
நாளை பிப்ரவரி 17 ம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது. இதில் 2026-27 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இந்த அரசின் சட்டப் பேரவையின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். தொடர்ந்து 4 நாட்கள் இந்த கூட்டம் நடைபெற்று 20 ம் தேதி அன்று முடிவுக்கு வரும்.
பிப்ரவரி 20 ம் தேதி 2026-27 ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையும் 2025-26 ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளும் சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப் படும். இந்த கூட்டத்தொடரில் அரச சார்பில் பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்ப கூடி வருகிறது.
இது இந்த சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.


