Connect with us

தமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனே பதவி விலக வேண்டும்: வைகோ

Published

on

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போதுவரை நடந்து வருகிறது. பாஜக மத்தியிலும், திமுக மாநிலத்திலும் முன்னிலையில் உள்ளது. அதிமுக தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவில் உள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுகவே அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்ததன் மூலம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கை வழியில் நிற்கின்ற திராவிட இயக்க பூமி தமிழ்நாடு என்பதை, இந்திய அரசியல் அரங்கத்திற்குத் தமிழக மக்கள் பறைசாற்றி இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுக்கால பாஜக அரசு, தமிழகத்தின் உயிராதாரமான காவிரி நீர் பிரச்சினை முதல் அனைத்திலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வந்ததையும், அதிமுக அரசு, அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்ததையும் பொறுத்துக் கொள்ள முடியாமல், தமிழக மக்கள் கோபாவேச உணர்வுடன் பொங்கி எழுந்துள்ளனர். பல்லாயிரம் கோடி பணத்தைச் செலவழித்தபோதிலும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுமையும் படுதோல்வி அடைந்துள்ள அதிமுக அரசு, மக்கள் நம்பிக்கையை அடியோடு இழந்து விட்டது.

தமிழ்நாடு சட்டசபைக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில், அதிகாரத்தின் துணைகொண்டு நடத்திய அத்துமீறல்களால் சில தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், அதிமுக அரசுக்கு, அதிகாரப் பொறுப்பில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை. எனவே, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனே பதவி விலக வேண்டும்.

வடபுலத்தில், மதவாத சனாதன சக்திகள் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கண்டதாலும், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் தரப்பில் ஓரணியில் நின்று தேர்தலைச் சந்திக்கும் சூழல் உருவாகாமல் போனதாலும், வாக்குகள் சிதறி பாஜக கூட்டணிக்குச் சாதகமான முடிவுகள் வந்துள்ளன.

தமிழகத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைக் கட்டி அமைத்து, தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டிய தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமைக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் வழங்கி இருக்கின்றார்கள். தமிழகச் சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் நடந்தாலும், திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கின்றார்கள் என வைகோ தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா17 minutes ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்1 மணி நேரம் ago

தமிழ்பஞ்சங்கம் 25.05.2026!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கல்கள், நஷ்டம் சந்திக்கக்கூடிய 3 ராசிகள்!

உலகம்2 மணி நேரங்கள் ago

“தோல்வியாளர்களை கேட்காதீர்கள்” – ஈரான் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடிவாகவில்லை: டிரம்ப்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 மே 2026

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: அக்டோபர் வரை 12 ராசிகளின் வாழ்க்கையில் என்ன மாற்றம்?

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வணிகம்7 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவுக்கு முன் IRTSA அதிரடி கோரிக்கை: DA, HRA, OPS உள்ளிட்ட பல மாற்றங்கள் வலியுறுத்தல்!

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. aaa mush love. Security.