இந்தியா
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் முடிந்தது. 13 லட்சத்து 3487 பேர் புதிதாக விண்ணப்பம்.

2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக அணைத்து வாக்காளர்களுக்கும் பிரத்யேக படிவங்கள் அளிக்கப்பட்டு விவரங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டு டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது 97லட்சத்து 37000 பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டிருந்தனர். திருத்தங்கள் மற்றும் புதியதாக பெயர் சேர்க்க கால அவகாசம் அளிக்கப்பட்டு அதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. கால அவகாசம் நேற்றோடு முடிந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதியதாக 13 லட்சத்து 3487 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வாக்காளர்கள் அளித்துள்ள விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி இன்று முதல் நடைபெறுகிறது. சரிபார்ப்பு பணி முடிந்த உடன் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பிப்ரவரி 17ம் தேதி தேர்தல் கமிஷனரால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அடுத்த ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.


