இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 02.01.2026

- டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.174550 கோடி. இது முந்தைய வசூலை விட 6.1 சதவீதம் அதிகம்.
- 2026 புத்தாண்டில் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் 545 குழந்தைகள் பிறந்துள்ளன. சென்னையில் மட்டும் 46 குழந்தைகள் பிறந்துள்ளன.
- அணைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாய்க்கடி தடுப்புசி மருந்து இருப்பு வைத்திருப்பது கட்டாயம். அரசு மருத்துவமனைகளில் நாய்கள் நுழைவதைத் தடுக்க சிறப்பு தொடர்பு அதிகாரி நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார மருத்துவ அதிகாரியும் தாலுகா மருத்துவமனைகள் மற்றும் பிற அரசு மருத்துவமனைகளில் தலைமை மருத்துவ அதிகாரியும் இருப்பர். இவர்களின் விவரங்கள் முகப்பில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவு.
- போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வை.கோ. சமத்துவ நடைப்பயணத்தை இன்று திருச்சியில் தொடர இருக்கிறார். இந்த நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- 2027 க்குள் தைவானை கைப்பற்ற சீனா திட்டமிட்டுள்ளதாக தைவான்அதிபர் பேச்சு.
- நேற்று புத்தாண்டையொட்டி அணைத்து சுற்றுலாத் தளங்களிலும் பொதுமக்கள் திரளாக கூடி மகிழ்ந்திருந்தனர்.
- கச்சத்தீவு அருகே உள்ள நெடுந்தீவு அருகே காரைக்கால் பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.
- அணைத்து சிவாலயங்களிலும் இன்று ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
- நாமக்கல்லில் இன்று முட்டை கொள்முதல் விலை ரூ.6.40. சென்னையில் ஒரு முட்டை ரூ.7.10க்கு விற்பனை ஆகிறது.
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.140 உயர்ந்து கிராம் ரூ.12580க்கும் சவரன் ரூ.100640க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ. 4 உயர்ந்து கிராம் ரூ.260க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.260000க்கம் விற்பனை ஆகிறது.

















