Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 25.12.2025

Published

on

  • தமிழ்நாட்டில்வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் படிவங்களை முறையாக வழங்காத 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ். நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்.
  • வாக்காளர்பட்டியலில் விடுபட்டவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பட்டியலில் உள்ள நேட்டிவிட்டி சர்ட்டிபிகேட் என்ற பிறப்பிட சான்றிதழை இணையம் மூலமாக பெறுவதில் சிக்கல் நீடித்து வருவதால் இணையம் மூலம் பெறுவதிலிருந்து விலக்கு. ஜனவரி 25ம் தேதி வரை தாசில்தார்கள், மண்டல துணை தாசில்தார்கள், தாலுகா துணை தாசில்தார்கள் கையொப்பமிட்டு வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இன்றையதங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து கிராம் ரூ.12820க்கும் சவரன் ரூ.102560க்கும் விற்பனை ஆகிறது.
  • இன்றையவெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து கிராம் ரூ.245க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.245000க்கும் விற்பனை ஆகிறது.
  • நாடாளுமன்றத்தில் எம்பிக்கள்தாய்மொழியில் உரையாற்ற அதிக ஆர்வம் காட்டுவதால் நேரலை உரைகளை 22 அலுவல் மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மொழிபெயர்க்க படுகிறது. கடந்த கூட்டத்தில் இந்தி ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளில் நிகழ்த்தப்பட்ட 160 உரைகளில் 50 உரைகள் தமிழில் நிகழ்த்தி சாதனை. அடுத்ததாக 43 மராத்தி உரைகள் 25 பெங்காலி உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
  • ஸ்விக்கியில்அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலில் தொடர்ந்து 10 வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது பிரியாணி. நிமிடத்திற்கு 194 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படடுள்ளன.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
business franchise magazine is a bi monthly publication that offers the latest news, expert advice, and franchise information from australia and new zealand.