Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 21.12.2025

Published

on

  1. பிரதமர் பெயரிலான  PMKVY திட்டத்தில் ரூ.14,450 கோடி முறைகேடு -சிஏஜி அறிக்கை
  2. அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட அனுமதி தேவையில்லை – தமிழக அரசு அறிவிப்பு
  3. டிசம்பர் 26 ம் தேதி முதல் இரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. – இரயில்வே துறை அறிவிப்பு
  4. இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை விட தரணி போற்றும் தமிழர் நாகரிகம் உயர்வானது. – மு.க.ஸ்டாலின்
  5. தமிழரின் தொன்மைக்கு பெருமை சேர்க்கும் வகையில் நெல்லை ரெட்டியார்பட்டியில் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  6. கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பில் கலக்கப்படும் வேதிப்பொருள்கள் தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை பேக்கரிகளில் ஆய்வு.
  7. காரைக்குடி செட்டிநாடு விமான நிலையத்தை விமான போக்குவரத்து மையமாக ரூ.3.97 கோடியில் மாற்ற தமிழ்நாடு அரசு டெண்டர் விட்டுள்ளது.
  8. பாண்டிச்சேரியில் ரங்கசாமி கட்சி என்டிஏ கூட்டணியிலேயே தொடரும் என இன்று
    அறிவிப்பு.
  9. 2026ல் என்டிஏ கூட்டணியில் புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவிப்பு
  10. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு வரும் டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை 12 நாட்கள் அரையாண்டு விடுமறை. ஜனவரி 5ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
  11. திருநெல்வேலியில் காயிதே மில்லத் பெயரில் ரூ.98 கோடியில் அமைய உள்ள பிரம்மாண்ட நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Translate »
Call message.