இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 21.12.2025

- பிரதமர் பெயரிலான PMKVY திட்டத்தில் ரூ.14,450 கோடி முறைகேடு -சிஏஜி அறிக்கை
- அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட அனுமதி தேவையில்லை – தமிழக அரசு அறிவிப்பு
- டிசம்பர் 26 ம் தேதி முதல் இரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. – இரயில்வே துறை அறிவிப்பு
- இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை விட தரணி போற்றும் தமிழர் நாகரிகம் உயர்வானது. – மு.க.ஸ்டாலின்
- தமிழரின் தொன்மைக்கு பெருமை சேர்க்கும் வகையில் நெல்லை ரெட்டியார்பட்டியில் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பில் கலக்கப்படும் வேதிப்பொருள்கள் தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை பேக்கரிகளில் ஆய்வு.
- காரைக்குடி செட்டிநாடு விமான நிலையத்தை விமான போக்குவரத்து மையமாக ரூ.3.97 கோடியில் மாற்ற தமிழ்நாடு அரசு டெண்டர் விட்டுள்ளது.
- பாண்டிச்சேரியில் ரங்கசாமி கட்சி என்டிஏ கூட்டணியிலேயே தொடரும் என இன்று
அறிவிப்பு. - 2026ல் என்டிஏ கூட்டணியில் புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவிப்பு
- தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு வரும் டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை 12 நாட்கள் அரையாண்டு விடுமறை. ஜனவரி 5ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
- திருநெல்வேலியில் காயிதே மில்லத் பெயரில் ரூ.98 கோடியில் அமைய உள்ள பிரம்மாண்ட நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
