Connect with us

இந்தியா

தீவிரவாதம் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட விசாரணைக் கைதிகளுக்கு இனிஅரசு நிதியுதவி கிடைக்காது. – ஒன்றிய அரசு அறிவிப்பு

Published

on

நிதி தெருக்கடியால் ஜாமீன் அல்லது அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் வாடும் ஏழை கைதிகளுக்கு உதவ ஏழை கைதிகள் ஆதரவு திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி ஒரு கைதிக்கு ஜாமீன் பெற ரூ.40000 வரை மற்றும் அபராதம் செலுத்த ரூ.25000 வரை நிதியுதவி அளிக்கப்படும். ஒன்றிய அரசு மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களுக்கு நிதி அளிக்கிறது. அவர்கள் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தீவிரவாத செயல்கள் வரதட்சணை மரணங்கள் பாலியல் வன்கொடுமை ஆள்கடத்தல் போக்சோ சட்டத்தின் கீழான கொடூர குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இந்த நிதியுதவி திட்டத்தின் பலன்கள் கிடைக்காது என்று  ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன் ஊழல் தடுப்பு சட்டம் பணமோசடி தடுப்பு சட்டம் போதை பொருள் கடத்தல் தீவிரவாத தடுப்பு சட்டம் (உபா) போன்ற குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிதியுதவி கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தற்போது மேலும் பல குற்றங்கள் சேர்க்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks.