Connect with us

இந்தியா

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் இலவச விடியல் பேருந்து பயணம்!!! தமிழக அரசு பரிசீலனை!!!

Published

on

தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தால் தினமும் 57.81 இலட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளைத் தொடர்ந்து ஆண்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் அதுகுறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வரப்பெற்றுள்ளன.

ஒடுக்கப்பட்டவர்களாக இருந்த பெண்களுக்கு பெரியார் கொள்கைகளுக்கேற்ப பெண்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசால் இலவச பயணம் வழங்கப்படுகிறது. அரசின் நிதிநிலை சீராகும்போது ஆண்களுக்கும் விடியல் பயணம் வழங்க பரிசீலிக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் கூறியிருந்தார்.

இந்த நிலையில்  60 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை திமுக அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. விரைவில் சட்டமன்றத்துக்கான தேர்தல் வர உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இதுகுறித்தான அறிவிப்பு வரக்கூடும் என்று தெரிகிறது.

அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் “ அணைத்து ஆண்களுக்கும் இலவச பேருந்து பயண திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளதால் முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பயண திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்“ என்று கூறியுள்ளனர்.

Translate »
Your creator storefront at a flat 5% fee – with DR68 SEO and zero monthly fees..