Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 04.12.2025

Published

on

நேற்று மாலை திருவண்ணாமலை தீபம் அமைதியாகவும் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்பட்ட பிறகு தொடங்கிய கலவரம் பின்னர் 144 தடை உத்தரவுடனும்  முடிவடைந்தது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.96120க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 குறைந்து ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.200000 க்கு விற்பனை ஆகிறது.

புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஸ்டூடியோ உரிமையாளர் ஏவி.எம்.சரவணன் காலமானார். ஏவி.எம்.ஸ்டூடியோவில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஏவி.எம்.சரவணன் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை மீதான விசாரணை முடிந்து இன்னும் சற்று நேரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்க உள்ளது.

பாமகவின் மாம்பழ சின்னம் முடக்கப்படும். இருவருக்கும் பிரச்னை இருக்கிறதெனில் தேர்தலுக்கு பின் அவர்களின் அங்கீகாரம் குறித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தகவல்.

திருத்தணியில் பச்சரிசி மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

இந்தியாவில் ஆண்டுக்கு 2.50 லட்சம் பேர் கிட்னி செயலிழப்பால் உயிரிழப்பதாக மருத்துவத்துறை தகவல்.

ரூபாய் மதிப்பு ரூ.90 ஐ தாண்டி வரலாறு காணாத வீழ்ச்சி.

உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் நாளை இந்தியாவும் பெல்ஜியமும் மோதுகின்றன.

தமில்நாட்டில் இதுவரை எஸ்ஐஆர் படிவங்கள் 5.20 கோடி படிவங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இம்முறை 77.54 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.