இந்தியா
டிஜிட்டல் மோசடிகள் பலவிதம்.. இதோ ஒரு புதுரகம்…

நமது பிரதமர் கூறி வருவது போல நமது நாடு டிஜிட்டல் இந்தியாவாக மாறி வரும் நிலையில் அதில் நடைபெறும் பல்வேறு மோசடிகளால் சாமானிய மக்கள் முதல் நன்கு விவரம் தெரிந்த மக்கள் வரை பல்வேறு தரப்பினரும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
யுபிஐ பணபரிமாற்றத்தில் பல்வேறு மோசடிகள் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருவரது தரவுகளைத் திருடி அவரது நணபர்களிடம் பணம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்புவதும் தொலைபேசி மூலம் உரையாடி கேட்பதும் என பல்வேறு விதமாக இந்த மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
இப்போது சைபர் கிரைம் போலீசாரிடமிருந்து வந்துள்ள புதிய அறிவிப்பு இது.
அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை எடுத்து அட்டெண்ட் செய்தவுடன் “அலோ“ என்று சொல்ல வேண்டாம். எதிரில் இருக்கும் ஸ்கேமர்கள் அந்த “அலோ“ என்ற வார்த்தையை ரெக்கார்ட்செய்து ஏஐ தொழில்நுட்பம் மூலம் உங்களுடைய குரலை குளோனிங் செய்து நீங்கள் பேசுவதுபோல பேசி உங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து பணம் பறிக்கலாம் என்பதால் அதனால் நீங்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும் என்பதால் அழைப்பவர் பேசிய பின்னரே நீங்கள் பேசத்தொடங்குங்கள்
என காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உஷார் பொதுஜனங்களே… இனிமேல் போனை எடுத்து அலோ சொல்வீங்களா?…

















