செய்திகள்
தமிழ்நாடு அரசு புதிய நலத்திட்ட அறிவிப்புகள்: வணிகர்களுக்கு நிதியுதவி முதல் பேருந்து காஷ்பேக் வரை!

தமிழ்நாடு அரசு பல துறைகளைச் சேர்ந்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய அப்டேட்டுகளையும் நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளது. மாநில அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் வணிகர்கள், மாணவர்கள், பயணிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலருக்கும் பயனுள்ளதாக உள்ளன.
🔹 வணிகர்களுக்கு ரூ.10,000 திருமண நிதியுதவி
1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வணிகர் நல வாரியம் மூலம், உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள வணிகர்கள் தங்களின் குடும்ப திருமணத்திற்காக ரூ.10,000 நிதியுதவி பெறலாம். இந்த உதவிக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க அரசுப் பிரிவு ஊக்குவித்துள்ளது.
🔹 சென்னை அரசு பேருந்து பாஸ் வாங்கும் பயணிகளுக்கு ரூ.50 காஷ்பேக்
சென்னை ஒன் (Chennai One) ஆப் மூலம் BHIM வழியாக மாதாந்திர பாஸ் வாங்கும் பயணிகள் ரூ.50 வரை காஷ்பேக் பெறலாம். இது குறுகிய காலத்திற்கான சிறப்பு ஆஃபராக அறிவிக்கப்பட்டுள்ளது.
🔹 தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் 2.78 லட்சம் பேர் வேலை பெற்றனர்
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க, 2021 முதல் 2025 வரை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில்
2,78,619 பேர் வேலை கிடைத்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.
🔹 நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 9.86 லட்சம் பேர் பரிசோதனை பெற்றனர்
முழு உடல் பரிசோதனை வழங்கும் இந்த திட்டத்தில்
மொத்தம் 9,86,732 பேருக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
🔹 மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் – 29.59 லட்சம் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டது
கர்ப்பிணிகளின் நலனுக்காக வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம்
29,59,466 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
🔹 7.38 லட்சம் நகல் குடும்ப அட்டைகள் விநியோகம்
குடும்ப அட்டை இழந்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து ரூ.50 கட்டணத்தில்
7,38,778 நகல் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
🔹 எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 25.08 இலட்சம் மாணவர்கள் பயன்
மாணவர்களின் அடிப்படை கல்வி திறனை மேம்படுத்தும் இந்த திட்டத்தில் மொத்தம்
25.08 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
🔹 கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேம் புனிதப் பயணம் – நிதியுதவி
ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு,
ஒரு நபருக்கு ரூ.37,000
கன்னியாஸ்திரி, அருட்சகோதரிகளுக்கு தலா ரூ.60,000
அரசு நிதியுதவி வழங்குகிறது. விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.
🔹 பால் உற்பத்தி உயர்த்த விவசாயிகளுக்கு தீவன விதைகள்
காலைப் பழக்கத்தை ஊக்குவிக்க, குறைந்த விலையில் தீவன விதைகள் ஆவின் நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
