Connect with us

வணிகம்

8வது ஊதியக் குழு புதிய தகவல்: அடிப்படை சம்பளம் ரூ.50,000 தாண்டுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவிருக்கும் மகிழ்ச்சி செய்தி!

Published

on

8வது சம்பளக்குழு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த குழுவின் பரிந்துரைகளை அரசு 2026 ஜனவரியில் அமல்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிக்கை 2025 முடிவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்னும் முக்கிய அளவுகோல்
7வது சம்பளக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக இருந்தது.

8வது குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே அமலாக்கப்பட்டால், அடிப்படை சம்பளம் ரூ.50,000 வரை உயர வாய்ப்புள்ளது.

ஃபிட்மென்ட் ஃபாக்டர்புதிய அடிப்படை சம்பளம் (ரூ)
1.92₹34,560
2.08₹37,440
2.28₹41,040
2.57₹46,260
2.86₹51,480

மூன்று முக்கிய அலவன்சுகளில் மாற்றம்
இந்த ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால், மூன்று முக்கிய அலவன்சுகளான HRA, DA மற்றும் TA இல் கூடுதல் சலுகைகள் வழங்கப்படும். இதனால் ஊழியர்களின் மொத்த வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் உயரும்.

மொத்த அரசு செலவினத்தில் மாற்றம்
இந்த பரிந்துரைகள் அமலாக்கப்பட்டால், மத்திய அரசின் ஊதிய செலவுகள் 15%-20% வரை அதிகரிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

8வது சம்பளக்குழு யாருக்கு நன்மை தரும்?
இந்த குழு மூலம் சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடி நன்மை பெறுவார்கள்.

Translate »
upgrade to vip (no plugin) →.