Connect with us

வணிகம்

PPF Vs SIP: ரூ.11,000 மாதம் முதலீடு செய்தால் 30 ஆண்டுகளில் எவ்வளவு returns கிடைக்கும்? முழுமையான கணக்கீடு!

Published

on

மியூச்சுவல் ஃபண்ட் SIP மற்றும் பொதுவருங்கால வைப்பு நிதி (PPF) ஆகியவை நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்புகள். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு ரிஸ்க் மற்றும் ரிட்டன் அளவுகளை கொண்டுள்ளன.

✅ SIP – மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்

SIP என்பது சந்தை சார்ந்த Mutual Fund திட்டமாகும். இதில் மாதம் மாதம் நிலையான தொகையை முதலீடு செய்யலாம். பங்குசந்தை வளர்ச்சி அடிப்படையில் உயர்ந்த returns கிடைக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், சந்தை ஏற்ற இறக்கங்களால் சற்றே அதிக ரிஸ்க் உள்ளது.

  • மாதாந்திர முதலீடு: ரூ.11,000

  • மொத்த முதலீடு (30 ஆண்டுகள்): ரூ.39,60,000

  • அனுமான வருமானம்:

    • 12% Return (Equity + Debt Funds): ₹3,38,90,705

    • 10% Return (Equity Funds): ₹2,28,72,220

    • 8% Return (Debt Funds): ₹1,55,93,746

✅ PPF – பொதுவருங்கால வைப்பு நிதி

PPF என்பது பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகும். இது ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்குகிறது. 15 ஆண்டு lock-in period உள்ளது, மேலும் 5 வருடங்கள் தொடரும் வசதியும் உண்டு.

  • மாதாந்திர முதலீடு: ரூ.11,000

  • மொத்த முதலீடு: ரூ.39,60,000

  • வட்டி விகிதம்: 7.1%

  • 30 ஆண்டுகளில் கிடைக்கும் தொகை: ₹1,35,96,801

  • மொத்த வட்டி: ₹96,36,801

✅ PPF Vs SIP: எது சிறந்தது?

  • Risk & Return: அதிக லாபம் விரும்பினால் SIP சிறந்தது.

  • Safety: பாதுகாப்பான முதலீட்டுக்கு PPF சிறந்தது.

  • Tax Benefits: இரண்டிலும் வரி விலக்குகள் உள்ளன (80C).

Translate »
Scale your rankings with free backlinks & website citations.