Connect with us

ஆன்மீகம்

ஆடி வெள்ளி 2025: முதல் வெள்ளி சிறப்பு வழிபாடு முறைகள், பூஜை செய்யும் நேரம் மற்றும் பயன்கள்!

Published

on

ஆடி மாதம் தமிழ் கலாச்சாரத்தில் ஆன்மிகரீதியாக மிக முக்கியமான மாதமாகும். இந்த மாதத்தில் பெண்கள் அம்மனை சிறப்பாக வழிபடும் போது, குடும்பத்தில் செல்வம், சௌபாக்கியம் பெருகும் என்பதே நம்பிக்கை. அதிலும் ஆடி வெள்ளி நாட்கள் சிறப்புக்குரியவை.

2025 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் 5 வெள்ளிகள் வருகின்றன. அதில் முதல் வெள்ளி நாளான ஜூலை 18, 2025, இந்த நாளில் அம்மனை வழிபடுவதற்கான நேரம் காலை 09.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 04.45 மணி முதல் 05.45 மணி வரை சிறப்பாக அமைந்துள்ளது.

ஆடி வெள்ளி அன்று செய்ய வேண்டிய பூஜை முறைகள்:

  • அதிகாலையில் எழுந்தவுடன் வீட்டு வாசலை நீர் தெளித்து, கோலம் போட வேண்டும்.

  • பூஜை அறையை சுத்தம் செய்து, சாமி படங்களை அழகாக அலங்கரிக்க வேண்டும்.

  • வேப்பிலையை வாசலில் கட்ட வேண்டும்.

  • பூஜை அறையில் கலசத்தை வைத்து, அதில் நூல் சுற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும்.

  • கலசத்தில் தண்ணீர் ஊற்றி, அதன் பக்கத்தில் கோலம் போட்டு வைத்து, தீபாராதனை செய்ய வேண்டும்.

  • அம்மனை வரவேற்கும் வகையில் விளக்கு ஏற்றி, சர்க்கரைப் பொங்கல், பழங்கள், தேங்காய் போன்றவை நைவேத்தியமாக செலுத்த வேண்டும்.

தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் பெற வேண்டியவர்கள்:

மாலை நேரத்தில் ஆதிபராசக்தி, புவனேஸ்வரி, அகிலாண்டேஸ்வரி, அம்பிகை ஆகிய அம்மன்களை பூக்கள் கொண்டு அலங்கரித்து வழிபட்டால் தொழில் வளர்ச்சி, மாங்கல்ய பாக்கியம், திருமணத் தடைகள் நீக்கம், குழந்தை பாக்கியம் போன்றவற்றை பெறலாம்.

மேலும், சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழம், தேங்காய் வழங்குவது நன்மை தரும்.

ஆடி வெள்ளி விரதத்தை மனதார கடைப்பிடிப்பவர்களுக்கு, வீட்டில் வளம், சுபிக்ஷம் பெருகி, நினைத்த காரியம் நிறைவேறும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Translate »
me profile.