செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள் – இன்று தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை:
தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டு தொடங்கி, குடும்ப தலைவியான மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது 1.15 கோடி பேருக்கு இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இதில் தகுதி இருந்தும் தவற விட்டுபோனவர்களுக்காக “மக்களுடன் முதல்வர்” முகாம் என்ற பெயரில் ஜூன் 4 முதல் மாநிலம் முழுவதும் 9000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள அலுவலகங்களை நாடி சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க இருப்பவர்கள் இன்று முதல் கீழ்க்கண்ட ஆவணங்களை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்:
ஆதார் அட்டை
ரேஷன் அட்டை
வங்கி பாஸ்புக் (Account Number, Branch Name)
மின் இணைப்பு ரசீது (TNEB Bill)
கேஸ் புக் ரசீது (LPG Receipt, தேவையெனில்)
தற்போதைய வீட்டு முகவரி மற்றும் வீட்டு வகை (சொந்தமா/வாடகை)
திருமண நிலை
செயல்பாட்டில் உள்ள மொபைல் எண்
இவற்றின் நகல்கள் (xerox) மற்றும் அசல்களும் (original) தேவைப்படும்.
மேலும், இந்த விவரங்களை ஒரு வெள்ளைத் தாளில் முன்கூட்டியே எழுதிக் கொண்டு செல்லலாம், விண்ணப்பம் நிரப்பும் போது பயனுள்ளதாக இருக்கும்.
விண்ணப்பிப்பவர்கள் கவனமாகவும் பொறுமையாகவும் அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்ப வேண்டும். தவறுகள் இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பித்த பிறகு அதன் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மொபைல் எண்ணை பயன்படுத்தி அறிந்துகொள்ளலாம். விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லையா என்பது குறுந்தகவல் (SMS) மூலமாக தெரிவிக்கப்படும்.
இது அனைத்து மகளிருக்கும் கிடைக்கும் திட்டம் அல்ல. தமிழக அரசு நிர்ணயித்த சில தகுதிகளுக்கு உட்பட்டவர்களே இச்சிறப்பு வாய்ப்பைப் பெற முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.














