Connect with us

செய்திகள்

ரூ.5.5 LPA-ல் இருந்து ரூ.45 LPA வரைக்கும் ஜம்ப்! டெல்லி இளைஞரின் சம்பள சாகசம் வைரலாகும்!!

Published

on

AI காரணமாக பல நிறுவனங்களில் பணிநீக்கம் நடந்துவரும் நிலையில், ஒரு இளைஞரின் சம்பள வளர்ச்சி சம்பந்தமான பதிவு இணையத்தில் பெரிய அளவில் வைரலாகியுள்ளது. IBM-ல் 5.5 LPA CTC-யுடன் தனது தொழில்நுட்ப வாழ்க்கையைத் தொடங்கிய தேவேஷ் குமார், ஒரே ஆண்டில் ₹45 LPA CTC வரை உயர்வு பெற்றதாக கூறியுள்ளார். இது பலருக்கே அதிர்ச்சி அளித்துள்ளது.

AI Layoff-களுக்கு மத்தியில் ஒரு அதிசய முன்னேற்றம்

பலரும் வேலை இழப்புக்குப் பயந்து இருக்கும் நிலையில், இந்த சம்பள ஜம்ப் குறித்து தேவேஷ் கூறியிருப்பது ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. “ஒரே ஆண்டில் 700% சம்பள உயர்வு என்பது சாத்தியமா?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

IBM-இல் தொடங்கிய பயணம்

2024-ஆம் ஆண்டில் IBM நிறுவனத்தில் Associate System Engineer ஆக சேர்ந்த தேவேஷ், தனது X (முன்பு Twitter) பதிவில், “5.5 LPA-ல் ஆரம்பித்து தற்போது 45 LPA-வுக்கு ஒரு ஆஃபர் எனிடம் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு மறக்க முடியாத கனவுப் போல் தான் என கூறியிருக்கிறார்.

நம்ப முடியாமல் குழம்பும் நெட்டிசன்கள்

  • “ஒரே ஆண்டில் 45 LPA ஆஃபரா? அசாத்தியமா?”

  • “எங்களுக்கும் டிப்ஸ் கொடுங்க!”

  • “இது உண்மையா? நிறுவனம் எப்படி நம்பியது?”

  • “FAANG நிறுவனங்கள் முந்தைய சம்பளத்தை கவனிக்கவே மாட்டார்கள்” என்று அவர் விளக்கியுள்ளார்.

தொடர் பதிவுகளில், குமார் கூறுகையில், முக்கியமான நிறுவனங்களில் (FAANG/MAANG), முன்னைய சம்பளம் முக்கியமல்ல; அவர்கள் உள்ளமைக்கப்பட்ட பேஸ்கேலுக்கே பணி நியமனம் செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

சாதாரணமல்ல, ஆனால் சாத்தியம்

பலரும் இது உண்மையா என சந்தேகம் வெளியிட்டாலும், இது சாத்தியம் என சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பணியமர்த்தும் நிறுவனத்தின் பேஸ்கேல் சிஸ்டம், திறமை, மற்றும் நேர்மையான நெகோஷியேஷன் இருந்தால் இந்த மாதிரியான ஜம்ப் சாத்தியம் என நெட்டிசன்கள் விவாதிக்கின்றனர்.

Translate »
Different roof shapes for texas homes and their benefits commercial residential roof contractor clark roofing..