Connect with us

செய்திகள்

நாளை தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மாவட்டங்கள் எவை?

Published

on

தமிழகத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, நாளை (31 மே 2025) தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

  • கோயம்புத்தூர்

  • நீலகிரி

  • திருநெல்வேலி (மலைப்பகுதி)

  • தேனி

  • தென்காசி

  • கன்னியாகுமரி

மேலும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 மே 2025 வானிலை

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

01 ஜூன் முதல் 05 ஜூன் வரை வானிலை

இந்த நாள்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னை வானிலை

30-05-2025: வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம்.
அதிகபட்ச வெப்பநிலை: 35-36°C
குறைந்தபட்ச வெப்பநிலை: 28-29°C

31-05-2025: வெப்பநிலை சற்று அதிகரிக்கும்.
அதிகபட்சம்: 36-37°C | குறைந்தபட்சம்: 28-29°C

மீனவர்களுக்கு எச்சரிக்கை

30-05-2025 முதல் 03-06-2025 வரை:
தமிழக கடலோரங்கள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 45-55 கிமீ வேகத்தில், இடையிடையே 65 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்பு உள்ளது.

அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் மே 30 முதல் ஜூன் 3 வரை பல்வேறு பகுதிகளில் 40-65 கிமீ வேகத்தில் சுழற்சி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த நாட்களில் கடலில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கையிடப்பட்டுள்ளது.

Translate »
Explore storefront tools →.