வணிகம்
தங்கம் விலை 38% குறையும் வாய்ப்பு உண்மையா? நிபுணர் கணிப்பின் பின்னணி இதோ!

சென்னை:
தங்கம் – இந்தியர்களின் நம்பிக்கைக்குரிய முதலீடு. திருமணங்கள் முதல் திருவிழாக்கள் வரை தங்கத்தின் தேவை என்பது அவசியமான ஒன்று. அதனால்தான், தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் நமது நாட்டில் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.
தங்கத்தின் தற்போதைய நிலைமை:
கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு விலை ரூ.68,480 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.8,560 ஆக உள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் (28.3 கிராம்) தங்கத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.2,59,000 ஆக உள்ளது.
அதிர்ச்சியளிக்கும் கணிப்பு:
இந்த சூழலில், தங்கத்தின் விலை எதிர்காலத்தில் 38% வரை குறையலாம் என ஒரு அமெரிக்க பங்குச் சந்தை நிபுணரான ஜான் மில்ஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுவதாவது, 5 ஆண்டுகளில் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.89,510 லிருந்து ரூ.55,496 வரை குறையலாம் என்பது.
ஜான் மில்ஸ் வழங்கும் மூன்று காரணங்கள்:
தங்க விலை அதிகரிப்பால், சுரங்கங்களில் தோண்டும் அளவு அதிகரிக்கும்
எதிர்காலத்தில் தங்கத்திற்கான தேவை குறையலாம்
எந்த பொருளாக இருந்தாலும் உச்சத்தை எட்டியதும் வீழ்ச்சி தவிர்க்க முடியாது
ஆனால் மற்ற பொருளாதார நிபுணர்கள் சிலர், இந்தக் கணிப்பு எவ்வளவோ ஆழமாக ஆய்வு செய்யாமல் கூறப்பட்டதாகவே கருதுகிறார்கள். தங்கத்தின் தேவை எதிர்காலத்திலும் நிலைத்திருக்கும் என்றும், சர்வதேச அரசியல், பொருளாதார சூழ்நிலைகள் தங்க விலையை மேலும் பாதிக்கக்கூடியவை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கத்தின் விலை குறையும் எனும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தாலும், அது உண்மையா என்பது பற்றி தெளிவாக எந்த உறுதியும் இல்லை. முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடையாமல், தங்களது முதலீட்டை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம்.





