வணிகம்
தங்கம் விலை மீண்டும் ரூ.60,000-க்கு குறையலாம்? – பொருளாதார நிபுணர்கள் கூறும் சாத்தியக்கூறு

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வைத் தொட்ட நிலையில், இனி விலை வீழ்ச்சியடைந்தால் என்ன?
உலகப் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சூழ்நிலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக ரஷ்யா-உக்ரேன் போர், இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் போன்றவை, உலகளாவிய நிதிச் சூழலை நிச்சயமற்றதாக்கின. இந்த நிலையில், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் பல நாடுகள் முதலீடு செய்யத் தொடங்கின.
இந்த தேவையால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தது. கடந்த ஆண்டு, வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்தது. மேலும், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில், பரஸ்பர வரி விதிப்பு திட்டம் அறிமுகமானது. இதனால் உலக பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன.
இந்த பங்குச் சந்தை வீழ்ச்சியால், முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தின் பக்கம் திரும்பினர். இதனால் தங்கம் விலை மேலும் உயர்ந்தது. தற்போது (14 ஏப்ரல் 2025) ஒரு கிராம் தங்கம் ரூ.8,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது, இது நேற்று ஒப்பிட்டு ரூ.15 குறைவு. சவரனுக்கு விலை ரூ.120 குறைந்து ரூ.70,040-ஆக உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அரசு பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது. சீனாவுக்கும் சலுகை அளிக்கும்படி சீன அரசு அழுத்தம் அளித்து வருகிறது. இது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
மேலும், அமெரிக்க மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு இருப்பதால், டாலர் மதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பணப்புழக்கம் அதிகரிக்கும், முதலீட்டாளர்கள் தங்கம் விலையை மீண்டும் மதிப்பீடு செய்வார்கள் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இத்தனை காரணங்களாலும், தங்கம் விலை எதிர்காலத்தில் 15% வரை குறையலாம் என நிபுணர்கள் கணிக்கிறார்கள். இது நடக்குமானால், தங்கத்தின் விலை மீண்டும் 60,000 சதவணுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சில நிபுணர்கள் பொருளாதார நெருக்கடி விரைவில் தீராது என்றும் எச்சரிக்கின்றனர்.





















