வேலைவாய்ப்பு
NHM திட்டத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்குங்கள் – நேரம் குறைந்துவிட்டது!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
NHM திட்டத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்குங்கள்!
நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய நலவாழ்வு மையத்தில் NHM திட்டத்தில் பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.03.2025
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சுகாதாரப் பகுதி, L.N.புரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய நலவாழ்வு மையத்தில் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கீழ் NHM திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 4 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் & தகுதி:
- மருத்துவ அலுவலர் (Medical Officer) – 1 பதவி
- செவிலியர் (Staff Nurse) – 1 பதவி
- பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) (MPHW-Male) / சுகாதார ஆய்வாளர் (Health Inspector, Grade-II) – 1 பதவி
- பணியாளர் (Hospital Worker / Support Staff) – 1 பதவி
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பங்கள் https://pudukkottai.nic.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
- விண்ணப்பத்தை நேரில் அல்லது தபால் மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை – 622 001.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 24.03.2025 மாலை 5.45 மணி வரை.
முக்கிய குறிப்பு:
- இந்த பணியிடம் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது.
- பணியிடங்கள் நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
- ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உரிய சான்றிதழ் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
அரசாங்க மருத்துவத் துறையில் பணியாற்ற விரும்புவோர் உடனே விண்ணப்பிக்குங்கள்!
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


