வேலைவாய்ப்பு
7,783 அங்கன்வாடி பணியிடங்கள்: விண்ணப்பிக்க வாய்ப்பு! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு அறிவிப்பு – 7,783 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்படும்!
தமிழ்நாடு அரசு 7,783 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் பல்வேறு அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலிப்பணியிடங்கள் விவரம்:
🔹 அங்கன்வாடி பணியாளர் – 3,886
🔹 மினி அங்கன்வாடி பணியாளர் – 305
🔹 அங்கன்வாடி உதவியாளர் – 3,592
கல்வித் தகுதி:
✔ அங்கன்வாடி & மினி அங்கன்வாடி பணியாளர் – 12ம் வகுப்பு (SSLC) தேர்ச்சி
✔ அங்கன்வாடி உதவியாளர் – 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
🔸 அங்கன்வாடி & மினி அங்கன்வாடி பணியாளர் – 25 முதல் 35 வயது
🔸 அங்கன்வாடி உதவியாளர் – 20 முதல் 40 வயது
அதிகபட்ச வயது வரம்பில் பட்டியல்/ பழங்குடியினர்/ ஆதரவற்ற விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 ஆண்டு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் வேலைவாய்ப்பு தேடும் பெண்களுக்கு பெரிய சந்தர்ப்பம். விண்ணப்பிக்க விரும்புவோர் உடனே தயார் ஆகுங்கள்!


















