தமிழ்நாடு
TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியான 20 முக்கிய அறிவிப்புகள்!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
தமிழ்நாடு 2025-26 நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் அரசியல், சமூக நலம், பொருளாதாரம், கல்வி, போக்குவரத்து, கட்டிடவியல் வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளை முன்னிறுத்தி முக்கிய அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
பட்ஜெட்டில் இடம்பெற்ற 20 முக்கிய அறிவிப்புகளை இங்கே பார்ப்போம்!
தமிழ்நாடு 2025-26 பட்ஜெட்டில் 20 முக்கிய அறிவிப்புகள்!
கல்வி மற்றும் மொழி மேம்பாடு
1. 500 தமிழ் நூல்களை மொழிபெயர்க்க முதற்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு.
2.சிங்கப்பூர், துபாய், கோலாலம்பூர் நகரங்களில் தமிழ் புத்தகக் கண்காட்சி நடத்த திட்டம்.
3.2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்களுக்கான தரம் உயர்வு – ரூ.160 கோடி ஒதுக்கீடு.
4.அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு (AI), இணைய பாதுகாப்பு (Cyber Security) உள்ளிட்ட புதிய பட்டப்படிப்புகள் அறிமுகம்.
5. 1721 முதுநிலை ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள் இந்த ஆண்டில் நியமனம்.
குடிநீர் மற்றும் வீட்டு வசதி திட்டங்கள்
6. ரூ. 675 கோடி மதிப்பீட்டில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டு குடிநீர் திட்டங்கள் மறுசீரமைப்பு.
7. ரூ. 6,668 கோடி மதிப்பீட்டில் 7 மாவட்டங்களில் 29.74 லட்சம் மக்கள் பயன்பெறும் புதிய குடிநீர் திட்டங்கள்.
8. கலைஞரின் கனவு இல்லம் திட்டம் – ரூ. 3500 கோடி மதிப்பீட்டில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
9. சென்னை அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம் உருவாக்கம்.
மகளிர் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள்
10. “புதுமை பெண்” திட்டத்திற்கு ரூ. 420 கோடி ஒதுக்கீடு.
11. மகளிர் விடியல் பயண திட்டம் – ரூ. 3600 கோடி ஒதுக்கீடு.
12. 10 இடங்களில் புதிய தோழி விடுதிகள் – ரூ. 77 கோடி ஒதுக்கீடு.
13. சென்னை, கோவை, மதுரையில் 1000 மாணவிகள் பயன்பெறும் புதிய விடுதிகள் – ரூ. 275 கோடி ஒதுக்கீடு.
14.கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு ரூ. 13,807 கோடி நிதி ஒதுக்கீடு.
நகர மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு
15. ரூ. 88 கோடி மதிப்பீட்டில் சென்னையில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள் (Sponge Parks).
16. ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவரை சேர்க்க நடவடிக்கை – முதற்கட்டமாக சென்னை, தாம்பரத்தில் தொடக்கம்.
17. ரூ. 10 கோடி மதிப்பீட்டில் 25 இடங்களில் அன்புச்சோலை முதியோர் பகல் நேர பராமரிப்பு மையம்.
18.10,000 புதிய சுய உதவிக்குழுக்கள் உருவாக்கம் – ரூ. 37,000 கோடி கடன் ஒதுக்கீடு.
19.ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் – ஆன்மிக சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய முடிவுகள்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக நலத் திட்டங்கள்
20.நகர்ப்புற பெண்கள் பாதுகாப்பு திட்டம் அறிமுகம் – புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்படும்.
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26: முக்கிய அம்சங்கள்!
🔹 கல்வி, தொழில் வளர்ச்சி, குடிநீர், வீடுகள், மகளிர் நலம், தொழில் வளர்ச்சி, போக்குவரத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
🔹 மகளிர் நலம், குடிநீர் வசதி, நகர அபிவிருத்தி திட்டங்கள் முக்கிய முக்கியத்துவம் பெற்றுள்ளன.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

பொங்கல் பரிசு 2026: தை மாதத்தில் யாருக்கு ரூ.4000 கிடைக்கும்? முழு விவரம்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் நவம்பர் 30க்குள் வெளியாகும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு!

TN Budget 2025: 2026 தேர்தலை குறிவைத்து ஸ்டாலின் அரசு களமிறங்கும் பெரிய திட்டம்!




