Connect with us

இந்தியா

வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் சாமரம் வீசலாமா – ஒரு கர்நாடக அலசல் ரிப்போர்ட்…

Published

on

யார் கேட்டார்கள் இந்த ஆறு வழிச் சாலையையும் எட்டு வழிச் சாலையையும் பத்து வழிச் சாலையையும்…

1996 ம் ஆண்டு அப்போதைய கர்நாடக முதல்வராக இருந்த தேவகவுடா அவர்கள் பெங்களூருவில் இருந்து மைசூருக்கு ஆறு வழிச் சாலை போடத் திட்டம் தயாரித்தார்… இதன்படி 27000 ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 2003ம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட 27000 ஏக்கர் நிலமும் ‘நைஸ்’ என்ற கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது நடந்த அரசியல் கள மாற்றங்களின் காரணமாக முதல்வராக நிலங்களைக் கையகப்படுத்திய தேவகவுடா பிரதமர் ஆவதற்காக டெல்லிக்கு பறந்து விட்டார்..

பெங்களூரு மைசூருவிலிருந்து 140 கி.மீ. தொலைவில்தானே இருக்கிறது. 100 அடி அகலத்திற்கு சாலையை அகலப்படுத்தினால் கூட 6000 ஏக்கர் நிலம் இருந்தால் போதுமே.. எதற்கு கூடுதலாக 21000 ஏக்கர் நிலம் என விவசாயிகள் சிந்தித்து கேள்விகள் கேட்கத் தொடங்கினர்.

புதிய நெடுஞ்சாலையில் 6 இடங்களில் புதிய டவுன்ஷிப் கள் தொடங்கி வணிகம் செய்து கொள்ள ‘நைஸ்’ நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப் பட்டிருந்தது அந்த ஒப்பந்தத்தில். அதோடு விவசாயிகளுக்கு நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு விவசாயிகளின் மறுகுடியமர்வுக்காக வீட்டு மனைகளும் ஒதுக்கப்பட வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. நிலைமை இவ்வாறிருக்க அடுத்து வந்த முதல்வர்கள் திட்டத்தின் பாதையை மாற்றியமைத்து மண்ணை அள்ளி போட்டனர். திட்டப் பாதையில் 400, 500 ஏக்கர் என வளைத்துப் போட்டிருந்த அரசியல்வாதிகளின் நண்பர்கள் அதிர்ந்து போய் நைஸ் நெடுஞ்சாலை திட்டமே வேண்டாம் என போர்க்குரல் எழுப்ப திட்டமே ரத்தானது.

அதன்பிறகு பெங்களுரு மைசூரு 10 வழிச்சாலை திட்டம் மத்திய அரசால்  அறிவிக்கப்பட்டது. அதிர்ந்து போன அரசியல்வாதிகள் மீண்டும் நைஸ் நிறுவனத்துடன் கைகோர்த்தனர். அந்த டவுன்ஷிப் திட்டத்தையாவது ஒப்பந்தப்படி தர வேண்டும் என நைஸ் நிறுவனம் உச்சநீதிமன்ற கதவுகளைத் தட்ட டவுன்ஷிப் திட்டம் மீண்டும் கிடைத்தது.  இந்த நிலையில் சாலை பணிகளுக்காக நிலம் கொடுத்தவர்கள் உள்ளுர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்றதனால் உச்சநீதிமன்றம் தற்போதைய சந்தை மதிப்பிலேயே இழப்பிடு வழங்கப்பட வேண்டும் என சமீபத்தில் தீர்ப்பளித்தது.  ஆனால் இந்த இழப்பீடு சாலைப் பணிகளுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். நந்தி டவுன்ஷிப்புக்கு அளிக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு யார் வழங்குவது என கேள்விகள் எழத் தொடங்கின.

காவிரி பாயும் செழிப்பான இந்த நிலங்களின் மதிப்பு 2003 ல் ஒன்று அல்லது இரண்டு இலட்சம் மட்டுமே. ஆனால் இன்று ஒரு கோடியிலிருந்து நான்கு கோடி வரை. இந்த நிலையில் 27000 ஏக்கரிலிருந்து 10 வழிச்சாலை வெளிவட்டச்சாலை உள்வட்டச்சலை ஆகிய திட்டங்களுக்கு 13500 ஏக்கர் போக மீதி நிலத்தை உரியவர்களுக்கே திருப்பி வழங்கிவிடலாம் என கர்நாடக தொழில்  வளர்ச்சிக் கழகம் பரிந்துரைத்தது. திருப்பிக் கொடுத்து விட்டால் அரசாங்கத்திற்கு என்ன பயன் என்று அரசியல்வாதிகளால் அதுவும் கிடப்பில் போடப்பட்டது.

நாட்டு மக்களுக்கு உணவளித்து பசியைப் போக்கும் விவசாயிகளின் இது போன்ற கோரிக்கைகள் அரசுகளாலும் அரசியல்வாதிகளாலும் கண்டு கொள்ளப்படாமலே இருக்கிறது. இரத்தக் கண்ணீருடன் போராட்டங்களும் விவசாயமும் விவசாயியால் நடத்தப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன. காலம் பதில் சொல்லுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized52 minutes ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா16 மணி நேரங்கள் ago

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா7 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

Translate »
Register, Sell Create high-converting webinar landing pages with countdown timers, registration forms, and replay sales – free, with DR68 SEO and zero monthly fees. C.