வணிகம்
LPG சிலிண்டர் விலையில் மாற்றம் – 2025 மார்ச் மாதத்தின் புதிய விலை அறிவிப்பு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
LPG சிலிண்டர் விலையில் மாற்றம் – 2025 மார்ச் மாதத்தின் புதிய விலை அறிவிப்பு
LPG Gas Cylinder Price Hike – மார்ச் 2025 இல் இந்தியாவில் LPG சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் மக்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கான விலைகளை பாதிக்கிறது.
கேஸ் சிலிண்டர் வகைகள்
கேஸ் சிலிண்டர்கள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன:
- மக்கள் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய LPG சிலிண்டர்
- வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய LPG சிலிண்டர்
இந்த மாற்றம் வணிக LPG சிலிண்டர்களுக்கு முக்கியமானது. தற்போது 19KG எடை கொண்ட வணிக LPG சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1959.50 பைசா இருந்தது. இந்த மாதம் ரூ.5.50 பைசா உயர்ந்து ரூ.1965 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு, ஹோட்டல் மற்றும் உணவகங்களில் உணவின் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் வணிக LPG சிலிண்டர் விலை
- டெல்லி: ரூ.1803 (முந்தைய ரூ.1797)
- கொல்கத்தா: ரூ.1913 (முந்தைய ரூ.1907)
- மும்பை: ரூ.1755.50 (முந்தைய ரூ.1749.50)
- சென்னை: ரூ.1965.50 (முந்தைய ரூ.1959.50)
மக்கள் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய LPG சிலிண்டர் விலை
பொதுவாக, வீடுகளுக்கான LPG சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. கடந்த மாதம் ₹818.50 காசுகளுக்கு விற்கப்பட்ட இந்த சிலிண்டர், இம்மாதமும் அதே விலையில் விற்கப்படுகிறது.
வீட்டில் பயன்படுத்தக்கூடிய LPG சிலிண்டர் விலை:
- டெல்லி: ரூ.803
- கொல்கத்தா: ரூ.829
- மும்பை: ரூ.802.50
- சென்னை: ரூ.818.50
LPG Delivery Charges மற்றும் ஐந்து ஆயிரம் ரூபாய்க்கு சிலிண்டர்
சிலின்டரை ₹500 க்குப் பெறுவது பற்றி கேள்வி எழுப்பப்படுகின்றது. பாரத் கேஸ் ஏஜென்சி இந்த 500 ரூபாய் விலைக்கு சிலிண்டர் விற்பனை செய்யுகிறது. இந்த சலுகை குறைந்த வருமானக்காரர்களுக்கு சிறந்த உதவி, குறிப்பாக 3 பேர் வீடுகளில் வசிக்கும் மக்கள் இதை பயன்படுத்த முடியும்.
இந்த தகவலுக்குப் பலர் பயனடைவார்கள். LPG சிலிண்டர் விலை உயர்வு மற்றும் delivery charges பற்றி தெரிந்து கொள்வது அவர்களுக்குத் தகுந்த உதவி அளிக்கும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

நீங்கள் கனரா வங்கி வாடிக்கையாளரா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!

சொத்து வரியை அடுத்து வாகனப்பதிவு கட்டணம் உயர்வு: ரூ.2500ல் இருந்து ரூ.10,000 என உயர்ந்ததால் அதிர்ச்சி!

ஆகஸ்ட் 1 முதல் வங்கி சேவை கட்டணத்தில் புதிய மாற்றம்.. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அறிவிப்பு!

சுங்கச்சாவடி கட்டணங்கள் நியாயமாக இல்லை: சென்னை ஐகோர்ட் கருத்து

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்றாலும் பாரத் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு மானியம் தொடரும்!


















