செய்திகள்
ஜனவரி 2025: முக்கிய விழாக்கள், விரத நாட்கள் மற்றும் சுப முகூர்த்தங்கள்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
புத்தாண்டின் தொடக்கமாக வரும் ஜனவரி மாதம் பல முக்கிய நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, குடியரசு தினம் போன்றவை மாதத்தின் சிறப்பாக இருக்க, முக்கிய விரத நாட்கள், சுப முகூர்த்தங்கள், அஷ்டமி, நவமி மற்றும் கரி நாட்களும் இடம்பெறுகின்றன. இவை அனைத்திற்கான விவரங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
ஜனவரி 2025: முக்கிய விசேஷங்கள்
- ஜனவரி 01 (புதன்): ஆங்கில புத்தாண்டு
- ஜனவரி 10 (வெள்ளி): வைகுண்ட ஏகாதசி
- ஜனவரி 11 (சனி): கூடாரவல்லி
- ஜனவரி 13 (திங்கள்): போகிப் பண்டிகை
- ஜனவரி 14 (செவ்வாய்): தை பொங்கல்
- ஜனவரி 15 (புதன்): மாட்டுப் பொங்கல்
- ஜனவரி 16 (வியாழன்): காணும் பொங்கல்
- ஜனவரி 26 (ஞாயிறு): குடியரசு தினம்
- ஜனவரி 29 (புதன்): தை அமாவாசை
ஜனவரி 2025: விரத நாட்கள்
- அமாவாசை: ஜனவரி 29
- பௌர்ணமி: ஜனவரி 13
- கிருத்திகை: ஜனவரி 09
- திருவோணம்: ஜனவரி 02, 29
- ஏகாதசி: ஜனவரி 10, 25
- சஷ்டி: ஜனவரி 05, 19
- சங்கடஹர சதுர்த்தி: ஜனவரி 17
- சிவராத்திரி: ஜனவரி 27
- பிரதோஷம்: ஜனவரி 11, 27
- சதுர்த்தி: ஜனவரி 03
ஜனவரி 2025: சுப முகூர்த்த நாட்கள்
- தேய்பிறை முகூர்த்தம்: ஜனவரி 19, 20
- வளர்பிறை முகூர்த்தம்: ஜனவரி 31
ஜனவரி 2025: அஷ்டமி, நவமி, கரி நாட்கள்
- அஷ்டமி: ஜனவரி 06, 21
- நவமி: ஜனவரி 07, 22
- கரி நாட்கள்: ஜனவரி 14, 15, 16, 24, 30
இந்த மாதத்தின் விவரங்களை பயன்படுத்தி, உங்கள் திட்டங்களை சிறப்பாக அமைக்கவும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.




















