சினிமா செய்திகள்
விவேக்கின் வெள்ளைப் பூக்கள் ட்ரெய்லர் ரிலீஸ்!
காமெடி நடிகர் விவேக், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஹீரோவாகி உள்ள வெள்ளைப் பூக்கள் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரிட்டயர் ஆன போலீஸ் ஆபிஸர் கதாபாத்திரத்தில் சீரியஸான போலீஸ் அதிகாரியாக நடிகர் விவேக் நாயகனாக நடித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறும் கொலைகளை விசாரிக்கும் அதிகாரியாக விவேக் செல்வதும், அங்கு நடைபெறும் கொலைகளை தனது பாணியில் துப்பு துலக்குவதும் என அசத்தியுள்ளார்.
இந்த படத்தில், விவேக்குடன், சார்லி, பூஜா தேவரியா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இயக்குநர் கெளதம் மேனன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். அவர் இயக்கிய வேட்டையாடு விளையாடு ஸ்டைலில் படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி வெள்ளைப் பூக்கள் படம் திரைக்கு வருகிறது.
















