இந்தியா
தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள் 9 பேர் பரிதாப பலி: அதிர்ச்சி சம்பவம்

கொல்கத்தாவில் நடந்த பயங்கர தீ விபத்தில் தீயை அணைக்கச் சென்ற 9 தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஸ்ட்ராண்ட் என்ற சாலையில் உள்ள ரயில்வே வணிக வளாகத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அந்த வளாகத்தில் இருந்த கடைகளில் தீ மிக வேகமாக பரவியது.
முதலில் 13-வது மாடியில் நள்ளிரவில் தீ பரவியதாகவும் இதனை அடுத்து அந்த வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் தீ மிக வேகமாக பரவியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இது குறித்து தகவல் அறிந்த 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க சென்றனர்.
அப்போது தீயை அணைப்பதற்கு அந்த வளாகத்திற்குள் ஒரு சில தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் லிப்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென லிப்ட் நின்றுவிட்டதால் லிஃப்டில் சிக்கிக்கொண்ட 4 தீயணைப்பு வீரர்கள், இரண்டு காவலர்கள் மற்றும் ஒரு ரிசர்வ் படை வீரர் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி உடனடியாக சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். உயிரிழந்த 9 தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்கும் தலா ரூபாய் 10 லட்சம் நிதி அளிக்க உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




















