Connect with us

வணிகம்

8வது ஊதியக்குழு: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் இல்லாமலே பெரிய ஊதிய உயர்வு உறுதி!

Published

on

8வது ஊதியக்குழு தொடர்பான புதிய அப்டேட் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் 8வது ஊதியக்குழுவின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தற்போது அதன் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, குழு விரைவில் முழுமையாக அமைக்கப்பட உள்ளது.

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மாறாமலே ஊதிய உயர்வு வரக்கூடும் என்ற தகவல் தற்போது ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. 7வது ஊதியக்குழுவின் போது 2.57 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மூலம் குறைந்தபட்ச ஊதியம் ரூ.7,000 இருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது.

இப்போது என்ன நடக்கலாம்?

  • 2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மீண்டும் பயன்படுத்தப்பட்டால்,
    ரூ.18,000 ரூபாய் சம்பளம் பெறுபவர்கள்,
    ரூ.46,260 வரை சம்பள உயர்வைப் பெற வாய்ப்பு உள்ளது!

  • ஓய்வூதியதாரர்களுக்காக,
     ரூ.9,000 ரூபாய் ஓய்வூதியம்,
    ரூ.23,130 ஆக உயரக்கூடும்.

  • அரசின் நடவடிக்கை:

குழு அமைக்கப்பட்டவுடன், பல தரப்பினருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அதன்பின், ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும், இது வரலாற்றில் மிகப்பெரிய ஊதிய உயர்வாக அமைய வாய்ப்பு உள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயத்தில் தீர்மானமான முன்னேற்றம் ஏற்பட்டால், நிதியாண்டு 2025 முதல் புதிய ஊதிய கட்டமைப்பு செயல்படலாம்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Biolinker gives creators the same storefront – sell digital products at a flat 5% fee, free to start.