செய்திகள்
EPFO 3.0 எப்போது அமலில்? ATM & UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி — முழு விவரம்!

EPFO Latest News: 2026 புத்தாண்டு தொடக்கத்தில் EPF உறுப்பினர்களுக்கு பெரிய மாற்றங்களும் வசதிகளும் வரும் என்பதை EPFO சுட்டிக்காட்டியுள்ளது. “EPFO 3.0” என்ற புதிய டிஜிட்டல் வசதி அறிமுகமாகும் நிலையில், ATM மற்றும் UPI மூலம் PF பணத்தை நேரடியாக எடுக்கும் வசதியும் தொடங்க உள்ளது. இதுகுறித்த முழு விவரங்கள் இங்கே.
EPFO 3.0: EPF உறுப்பினர்களுக்கு வரும் புதிய மேம்பாடுகள்
ஊழியர்களுக்கு பாதுகாப்பான சேமிப்பாக இருக்கும் Provident Fund (PF) தற்போது ஆன்லைனில் எடுக்க 5 முதல் 7 நாட்களும், ஆஃப்லைனில் ஒரு மாதமும் ஆகிறது. இந்த தாமதத்தை குறைக்க EPFO 3.0 அறிமுகப்படுத்தப்பட்டு, PF கணக்குகளை மேலும் எளிதாகவும் வேகமாகவும் பயன்படுத்த முடியும்.
புதிய அமைப்பு ஜனவரி 2026 முதல் தொடங்கும் என கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
EPFO 3.0 வந்த பின், சந்தாதாரர்களுக்கு சிறப்பு ATM கார்டு வழங்கப்படும். இதன் மூலம் PF பணத்தை ATM மூலம் உடனடியாக எடுக்கலாம்.
ATM மூலம் PF பணம் எடுக்கும் முறை
EPFO வழங்கும் சிறப்பு ATM அட்டையைப் பயன்படுத்த வேண்டும்
இந்த அட்டை நேரடியாக உங்கள் PF கணக்குடன் இணைக்கப்படும்
அங்கீகரிக்கப்பட்ட EPFO ATM-களில் மட்டும் பணம் எடுக்க முடியும்
UAN இணைக்கப்பட்ட அட்டை மூலம் PIN இனை உள்ளிட்ட பிறகு Withdrawal விருப்பத்தைத் தேர்வு செய்து பணத்தை எடுக்கலாம்
UPI மூலம் PF பணம் எடுக்கும் வசதி
UPI மூலம் PF எடுக்க, PF கணக்கை உங்கள் UPI ID-க்கு இணைக்க வேண்டும். அதன்பிறகு:
Google Pay, PhonePe, Paytm போன்ற செயலிகள் மூலம்
PF பணத்தை உடனடியாக பெற முடியும்
இது மிக விரைவான டிஜிட்டல் Withdrawal வசதியாக இருக்கும்
ATM & UPI Withdrawal வரம்பு
EPFO 3.0 அறிமுகமான பிறகு:
ATM Withdrawal Limit: மொத்த PF தொகையில் அதிகபட்சம் 50% வரை
UPI Withdrawal Limit: இதைவிட குறைவாக இருக்கலாம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இறுதி வரம்புகள் வெளியிடப்படும்
EPF பணம் எடுப்பதற்கான நிபந்தனைகள்
ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் முன்பு 90% திரும்ப பெறலாம்
மருத்துவம், வீடு வாங்குதல், கல்வி போன்ற காரணங்களுக்கு பகுதி Withdrawal அனுமதி
ஒரு மாத வேலைஇல்லாமல் இருந்தால் 75% எடுக்கலாம்
முழுவதுமாக வேலை இழந்தால், முழு PF-யையும் எடுக்கலாம்
7 ஆண்டுகள் பணியாற்றிய பின் PF பங்களிப்பில் 50% மூன்று முறை எடுக்கலாம்
PF Withdrawal-க்கு வரி விதிக்கப்படுமா?
5 ஆண்டுகள் சேவையை முடித்த பின் PF பணம் எடுத்தால் வருமான வரி இல்லை
இந்த 5 ஆண்டு காலத்தை ஒரு நிறுவனத்தில் முடிக்க வேண்டிய அவசியமில்லை
பல நிறுவனங்களில் பணிபுரிந்த காலத்தைச் சேர்த்தும் கணக்கிடப்படும்
EPFO 3.0 மற்ற முக்கிய வசதிகள்
8 கோடி EPFO சந்தாதாரர்களின் பயன்பாடு எளிதாகும்
Claims automated ஆகும் — கைமுறை சரிபார்ப்பு தேவையில்லை
PF விவர திருத்தம் Online-லேயே செய்ய முடியும்
எளிய e-KYC
EPFO Portal/App-ல் Instant Updates
ஓய்வூதியம் பெற centralized payment system
வீடு, கல்வி, திருமணம் போன்ற காரணங்களுக்கு PF withdrawal மேலும் எளிதாகும்





















