தமிழ்நாடு
2022-ம் ஆண்டின் பொது விடுமுறை: சனி, ஞாயிறில் அதிக விடுமுறை என்பதால் அதிருப்தி

2022 ஆம் ஆண்டின் தமிழக அரசு விடுமுறை குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த விடுமுறையில் உள்ள ஒருசில நாட்கள் சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் வருவதால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
2022ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆங்கில புத்தாண்டு, திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள், தெலுங்கு வருட பிறப்பு, மே தினம், பக்ரீத், காந்தி ஜெயந்தி, மிலாதுநபி, கிறிஸ்மஸ் ஆகிய 9 நாட்கள் சனி ஞாயிறு விடுமுறையில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விடுமுறை தினங்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு
1. ஆங்கிலப் புத்தாண்டு- 01.01.2022- சனிக்கிழமை
2. பொங்கல்- 14-01-2022- வெள்ளிக்கிழமை
3. திருவள்ளுவர் தினம்- 15-01-2022- சனிக்கிழமை
4. உழவர் திருநாள்- 16-01-2022- ஞாயிற்றுக்கிழமை
5. தைப்பூசம்- 18-01-2022- செவ்வாய்க்கிழமை
6. குடியரசு தினம்- 26-01-2022- புதன்கிழமை
7. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு வங்கிகள்)- 01-04-2022- வெள்ளிக்கிழமை
8. தெலுங்கு வருடப் பிறப்பு- 02-04-2022- சனிக்கிழமை
9. தமிழ் புத்தாண்டு/மகாவீரர் ஜெயந்தி/டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்- 14-04-2022- வியாழக்கிழமை
10. புனித வெள்ளி- 15-04-2022- வெள்ளிக்கிழமை
11. மே தினம்- 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை
12. ரம்ஜான்- 03-05-2022- செவ்வாய்க்கிழமை
13. பக்ரீத்- 10-07-2022- ஞாயிற்றுக்கிழமை
14. மொகரம்- 09-08-2022- செவ்வாய்க்கிழமை
15. சுதந்திர தினம்- 15-08-2022- திங்கட்கிழமை
16. கிருஷ்ண ஜெயந்தி- 19-08-2022- வெள்ளிக்கிழமை
17. விநாயகர் சதுர்த்தி- 31-08-2022- புதன்கிழமை
18. காந்தி ஜெயந்தி- 02-10-2022- ஞாயிற்றுக்கிழமை
19. ஆயுத பூஜை- 04-10-2022- செவ்வாய்க்கிழமை
20. விஜயதசமி- 05-10-2022- புதன்கிழமை
21. மிலாதுன் நபி- 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை
22. தீபாவளி- 24-10-2022 திங்கட்கிழமை
23. கிறிஸ்துமஸ்- 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை




















