தமிழ்நாடு
அரசு பள்ளிகளில் அதிநவீன வகுப்பறைகள்.. முதல்வரின் நமக்கு நாமே திட்டம் கீழ் டெண்டர்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளை மேம்படுத்த நமக்கு நாமே திட்டம் கீழ் பொது மக்களிடம் இருந்து நிதி பெறும் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 10 முக்கிய அரசு பள்ளிகளின் வகுப்பறைகளை அதிநவீன வகுப்பறைகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன அரசு பள்ளி வகுப்பறைகள் டிஜிட்டல் வகுப்பறைகளாக இருக்கும். இணையதளம், நவீனமயமாக்கப்பட்ட மேஜைகள், உள்ளிட்டவற்றை இருக்கும்.
தோண்டேர்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு உள்ளிட்ட அரசு பள்ளிகளில் முதற்கட்டமாக இந்த அதிநவீன வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதற்காக முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 56.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.