இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.02.2026

- ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்குப் பதிலாக பணமாக வழங்கும் திட்டம் ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு “E-RUPAY“ னெ்ற டிஜிட்டல் முறை பயன்படுத்தப்படலாம். பயனாளியின் மொபைல் எண்ணுக்கு வவுச்சர் அனுப்பப்படும். அதை வங்கியில் பணமாக மாற்றவும் அல்லது தேவையான பொருட்களை வாங்கவும் பயன்படுத்தலாம்.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட குரூப்2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
- சபரிமலை ரயில் திட்டத்திற்காக ரூ.1900 கோடியை விடுவித்தது கேரள அரசு. அங்கமாலி முதல் எரிமேலி வரை 111 கி.மீ.தூரத்திற்கு 14 நிலையங்களுடன் வழித்தடம் அமைகிறது.
- தமிழ்நாட்டில் நெல்லை திருச்சி தர்மபுரி வேலூர் ஈரோடு மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் கூடுதலாக புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும். – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும். – தகவல்.
- ஆஸ்கார் விருதுக்கான சிறந்த படங்களுக்கான பட்டியலில் சசிக்குமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படம் தேர்வு.


















