இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.01.2026

- தமிழ்நாடு மாநில அரசில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
- இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து விற்பனை ஆன நிலையில் மாலை மீண்டும் ரூ.80 உயர்ந்து விற்பனை ஆனது.
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து கிராம் ரூ.12600க்கும் சவரன் ரூ.100800க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 உயர்ந்து கிராம் ரூ.257க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.257000க்கும் விற்பனை ஆகிறது.
- வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல்களை தொடுத்த நிலையில் அந்நாட்டு அதிபர் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு.
- அரசு நிலம் நீர்நிலைகள் பூங்கா ஆகிகரமிப்பு விவகாரம் தொடர்பாக வரும் புகார்களை 30 நாளில் விசாரித்து 90 நாளில் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.
- விஜய் சேதுபதி மற்றம் அரவிந்த் சாமி நடித்த “காந்தி டாக்ஸ்“ திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாகிறது என படக்குழுவினர் அறிவிப்பு.
- உலக எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முதல்முறையாக டெஸ்லா நிறுவனத்தை வீழ்த்தி சீனாவின் பிஒய்டி நிறுவனம் முதலிடம் பிடித்தது.
- சமூக ஊடக தளமான “எக்ஸ்“ தளத்தில் உள்ள அணைத்து சட்டவிரோத உள்ளடக்கங்களையும் நீக்கவும் முடக்கவும் உத்தரவிட்டது ஒன்றிய அரசு.
- பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய அரசின் பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
- ஜனநாயகன் திரைப்படத்திற்கு இந்த நிமிடம் வரை சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை.
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது.
- 2025-26 விஜய் அசாரே தொடரில் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து சாதனை!!!
