இந்தியா
மகளிர் பேருந்துக்கு மட்டும் தனி வண்ணமா? இதோ ரயிலில் மகளிர் பெட்டியும் தனி வண்ணத்தில் வருகிறது.

தமிழ்நாட்டில் பிங்க் நிற மகளிர் பேருந்து பிங்க் நிற மகளிர் ஆட்டோ இவையெல்லாம் சக்கை போடு போடுவதைப் பார்த்து பொறாமைப் பட்டுப் போய் இப்போது ரயில்களில் மகளிர் பயணம் செய்யும் பெட்டிகளுக்கும் தனி வண்ணம் பூசப் போகிறார்களாம்…
ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ரயில்வே வாரிய தலைவர் மகேஷ் லோகானி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை தற்போது ஒன்றிய அரசிடமும் ரயில்வே அமைச்சகத்திடமும் அளிக்கப்பட்டு விரிவாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
வரப்போகும் புதிய மாற்றங்கள்:
1.ரயில்களில் பெண்கள் பெட்டி கடைசியில் இருப்பதால் ஆபத்து காலங்களில் உடனடி உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பாடுவதைத் தடுக்க இனிமேல் ரயிலின் நடுப்பகுதியில் பெண்கள் பெட்டி மாற்றப்பட இருக்கிறது.
2.பெண்கள் பெட்டியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட இருக்கின்றன.
3.உதவி ஆய்வாளர் நிலையில் இரண்டு காவலர்கள் பெண்கள் பெட்டியில் பயணம் செய்ய உள்ளனர்.
4.கட்டணமில்லா தொலைபேசி இணைப்பு வசதியும் இனிமேல் வர இருக்கிறது.
5.பெண்கள் பெட்டிகளை பிற பெட்டிகளில் இருந்து சுலபமாக பிரித்து அறியும் படி மாறுபட்ட வண்ணம் பூசிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
6.இந்த சேவைகள் நீண்ட தூர ரயில்களில் மட்டுமில்லாமல் அணைத்து ரயில்களிலும் புறநகர் மற்றும் மெட்ரோ ரயில்களிலும் கூட இந்த மாற்றங்கள் வர இருக்கின்றன.
இனி மகளிர் தனி பேருந்து வரிசையில் மகளிர் தனி ரயில் பெட்டி போல் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் மகளிருக்கு தனி கவுண்டர்கள் அமைத்தால் மிகவும் வசதியாக இருக்கும் என பல்வேறு மகளிர் அமைப்புகள் கூறி வருகின்றன குறைந்தபட்சம் மகளிருக்கு டிக்கெட் வாங்க தனி கியூ வரிசையாவது கிடைக்குமா… என்பதே பலரின் ஏக்கமாக இருப்பது ரயில்வே நிருவாகத்தினரின் காதுகளுக்கு எட்டுமா?….















