இந்தியா
தேர்ந்தெடுத்த தகவல்களை பகிர ஆதார் செயலியில் வசதி

ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் தேவைப்படும் தகவல்களை மட்டும் பகிரும் வகை யில், ஆதார் செயலி மேம்படுத்தப்பட்டுள் ளது.
ஆதார் அட்டையை முழுதும் பகிர்வதால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை களையும் வகையில், தேர்ந்தெடுத்த தக வல்களை மட்டும், பகிரும் வகையில், தனித்துவ அடையாள ஆணையம், ‘செலக் டிவ் டேட்டா ஷேரிங்’ எனும் வசதியை, ஆதார் செயலியில் ஏற் படுத்தி உள்ளது.
இது வரை அடை யாள சரிபார்ப்பிற்காக, முழு ஆதார் அட்டையையோ அல்லது ஆதார்
முழு விபரங்களையோ வழங்க வேண்டியிருந்தது.
இனி, இந்த செயலியின் வாயிலாக, எந்த இடத்திற்கு அல்லது எந்த சேவைக்கு என்ன தகவல் தேவையோ, அந்த தகவலை மட்டும் தேர்ந்தெடுத்து அனுப்பும் வகையில், வசதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது புகைப்படத்தை மட்டும் பகிர முடியும்.
புதிய செயலியின் வாயிலாக, காகித மில்லா முறையில், ஆதார் வாயிலாக தகவல்களை பகிரும் போது, ஆதாரின் 12 இலக்க எண்களையும் வெளிப்படுத்தாமல், பாதிக்கு மேல் உள்ள எண்கள் மறைக்கப்படும்.
மேலும், செய லியை பதிவிறக்கம் செய்யும் போதும், தகவல்களை பகி ரும்போதும், ஓ.டி. பி., சரிபார்ப்பு மற்றும் கேமரா வாயிலாக, முக அடையாளத்தை சரி பார்த்த பின்பே பகிர முடியும். செயலியை, கைரேகை, விழித்திரை வாயிலாக பாதுகாக்க முடியும்









